பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 16.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ் வளம் – 16

ஒற்கம் என்பது மழை பொய்த்து வளங்குன்றலைக் குறித்தல், ‘ஒல்குதல்' என்பதன் வழியே பொருள் கொள்ள வழி செய்கின்றது. ஆதலால் மழை பொய்க்க, ஆறு வறள நேரினும் ஊற்றுக்கண் திறந்து உதவுதல் போல், கற்குங் காலத்துக் கற்கத் தவறியவரும் கேள்வியால், ஓரளவு இழந்த நலத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளக்குவதாக இக்குறள் அமைந்துள்ளது என்பதே நேர் பொருள் ஆகும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி என ஆளப்படும் கேணி வேறு. அது தோண்டுதல் - கருவி கொண்டு தோண்டுதல் - அளவினது. மண் மண்வெட்டி கொண்டு மணற் கேணியாக்கி உறையிட்டு நீர் எடுத்துப் பயன் கொள்வது வழக்கு. இவ்வூற்று, அத்தகைத்தன்று. கையால் மணலைப் பறித்து ஆக்குவது; காலைக் கொண்டு மணலைக் கிளறி ஊற்றாக்குதலும் நடை முறை ஆகலின், கேணியும் ஊற்றும் அளவு, முயற்சி ஆகியவற்றால் மிகுதியும் குறைவும் உடையவை. இவை கல்விக்கும் கேள்விக்கும் ஏற்பத் தனித் தனியே உவமை கூறப் பெற்றன என்க.

"கேள்வியறிவானது ஊற்று நீர் போல் சுரந்து தோன்றும்” என்று முதுபுலவர் மயிலை சிவமுத்தும், “வறண்ட காலத்து ஆற்று மணற்கேணி ஊற்றாந்துணை; கேட்டனைத் தூறும் என்று புலவர் மு. கோவிந்த சாமியாரும் உரைத்தனர். ஆயின், திருக்குறள் உரை வேற்றுமை கண்ட சாரங்கபாணியார் ஊற்றாந்துணை என்பதற்கு ஊற்று நீர் போல் சுரந்து துணை செய்யும் எனப் பொருள் கொள்ளலாமேனும் இக்குறளின் நடைப்போக்கு உவமை வைப்புடையதாக அமையவில்லை” என மறுக்கிறார்.

66

ஒற்கத்தின் ஊற்றாந்துணை என்பதற்கு வறட்சியில் ஊற்றதாகும் அளவினது என்று சொற் கிடந்தவாறே பொருள் கொள்ளலாம். அன்றியும் ஊற்றுத்துணை ஆம் எனச் சொன்னிலை மாற்றி ஊற்றின் அளவினதாம். ஊற்று ஒப்பதாம் என்றும் பொருள் கொள்ளலாம்; ஊற்று என்பது ஊற்றுக்கோல் போல் என இயைவது, 'ஊற்றுப்போல்' என ஊற்றுப்போல்' என இயைவதிலும் இடரில்லையாம்.

ஊற்று என்பது கிடந்தவாறு பொருள் தருவதை விலக்கிப் பற்றுக்கோட்டுப் பொருளுக்குக் கொண்டு சேறலே வலிந்து கூறலாம். அன்றியும் அடுத்த குறளிலேயே ஊற்றுக் கோல் என வெளிப்பட உவமையாய் ஆட்சி பெற்றிருப்பதறிந்தும்