பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

180.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

ஆசைக்கடலுள் ஆழும் மூவர்

தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார்.

அரியவை எண்ணி அமைந்தவர் மூவர்

181. இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்

விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்

அரிய 'துணிந்தொழுகு வார்.

20. புறங்கூறாமை

-திரிகடுகம் 81, 73

("காணாதவழிப் பிறரை இகழ்ந்துரையாமை. முகத்தெதிரே பிறரை இகழ்ந்து கூறுதல் செய்யாது அவர் புறத்தே கூறுதலாயிற்று. அது செய்யாமை புறங்கூறாமை

99

-

நாகை சொ. தண்ட.

இ.பெ.அ: திருக். 19. ப.பா.தி. 24.)

முகத்திற் புகர்ந்து முதுகிற் பழிப்போர்

182. முன்னின் றொருவன் முகத்தினும் வாயினும் கன்னின் றுருகக் கலந்துரைத்துப் - பின்னின் றழித்துரைக்குஞ் சான்றோரை யஞ்சியே தேவர் விழித்திமையார் நின்ற நிலை.

- அறநெறிச்சாரம் 84

183. தாக்குற்ற போழ்திற் றமரேபோல் நன்குரைத்துப் போக்குற்ற போழ்திற் புறனழீஇ 3மேன்மைக்கண் நோக்கற் றவரைப் பழித்தலென் னென்னானும் மூக்கற்ற தற்கில் பழி.

1. துணிந்துவாழ்.

2. றிழித்துரைக்கு மாந்தரை. 3. மெய்ம்மைக்கண்.