பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அடுக்கிய மூவுலகுங் 'கேட்குமே சான்றோர்

கொடுத்தா ரெனப்படுஞ் சொல்.

127

-நாலடியார் 100

இருவே றியாக்கை இயைந்ததை யுணர்மின்

245. ஒருவன திரண்டி யாக்கை யூன்பெய்து நரம்பு போர்த்த உருவமும் புகழு மென்றாங் கவற்றினு ளூழின் வந்து மருவிய யாக்கை யீங்கே மாய்ந்துபோ மற்றை யாக்கை திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபி னிற்கு மன்றே.

-(FOTIT LOGOO 776

27. அருளுடைமை

-

(‘யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறுபோல வருந்தும் ஈரமுடைமை மணக். “தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை" - பரிமே.

இ.பெ.அ: திருக். 25. இ.சா.அ: ப.பா.தி. 30 (அருள்))

அறத்தின் முதலாய் அமைந்த தருளே

246. அற்றாக நோக்கி யறத்திற் கருளுடைமை

3

முற்ற வறிந்தார் முதலறிந்தார் - தெற்ற

முதல்விட் டஃதொழிந்தா ரோம்பா வொழுக்கம் முயல்விட்டுக் காக்கை தினல்.

அருளறம் பெற்றார் சுமைவைப் புற்றார்

247. சிறந்த நுகர்ந்தொழுகுஞ் செல்வ முடையார் அறஞ்செய் தருளுடைய ராதல் - பிறங்கல் அமையொடு வேய்கலாம் வெற்ப வதுவே சுமையொடு மேல்வைப்பா மாறு.

-பழமொழி 370, 357

1. கேட்பரே.

2. உருவ மிங்கே. 3. வுணர்ந்தார்.