பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ் வளம் 17 வடிகொள் கண்ணியர் மனங்குழைந் தனங்கனென் றிரங்கக்

கொடையுங் கோலமுங் 'குழகுந்தம் மழகுங்கண் டேத்த

விடையிற் செல்வுழி விளியினும் விளியுமற் றறிநீ.

இன்புறு காலையில் இறப்பதும் கூடும்

381. எரிபொன் மேகலை யிலங்கரிச் சிலம்பொடு சிலம்பும் அரிபொற் கிண்கிணி யணியிழை 'மடந்தையர்ப் புணர்ந்து தெரிவில் போகத்துக் கூற்றுவன் செகுத்திடச் சிதைந்து முரியும் பல்சன முகம்புடைத் தகங்குழைந் தழவே.

பிணிப்புலி பாயுமுன் பெறுக துறவே

382. கோதை மங்கையர் குவிமுலைத் தடத்திடைக் குறித்துக் காதல் மக்களைக் கண்டுவந் தினிதினிற் ‘கழிப்பப் பேது செய்பிணிப் பெரும்புலி பாய்ந்திடப் 'பிணமாம் ஓத மாக்கட லுடைகலத் தவருற்ற துறவே.

மூப்பு வருமுன் முனைக துறவில்

383. காமம் பைபயக் 'கழியத்தங் கடைப்பிடி சுருங்கி ஊமர் போலத்தம் முரையவிந் துறுப்பினி லுரையாத் தூய்மை 'யில்குளந் தூம்புவிட் டாம்பொரு ளுணர்த்தி ஈம மேறுத லொருதலை யிகலமர் கடந்தோய்

சீவகசிந்தாமணி 2761, 2754, 2755, 2756, 2757, 2758, 2759, 2760

மரணமே கனியும் மாதுயர் வாழ்வு

384. பேதைமை யென்னும் வித்திற் பிறந்துபின் வினைக ளென்னும்

1. குழகுந்தன் னழகுங்கொண். 2. டெடுத்த. 4. களிப்பப்.

3. அரிவையர்ப்.

5. பிணமாய்.

6. கழிதலுங்.

7. யில்குளத்.