பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

காவலன் உலகின் கண்ணெனத் தக்கான்

481. கண்ணெனப் படுவ மூன்று

காவலன் கல்வி காமர்

விண்ணினைச் 'சுழல வோடும்

வெய்யவ னென்னும் பேரார் எண்ணினுள் தலைக்கண் வைத்த

கண்ணது வில்லை யாயின்

மண்ணினுக் கிருளை நீக்கும்

வகைபிறி தில்லை மன்னோ.

அறிவறிந் தாளின் அரியதொன் றில்லை

482. ஆற்றல்மூன் றோதப் பட்ட

வரசர்கட் கவற்றின் மிக்க

ஆற்றல்தான் சூழ்ச்சி யென்ப

வாதலா லதனை யாயும்

ஆற்றலா ரமைச்ச ராக

வமைச்சரோ டமர்ந்து செல்லும்

ஆற்றலா னரச னாகி

னரியதொன் றில்லை யன்றே.

தண்மையும் வெம்மையும் தழைத்தவன் வேந்தன் 483. எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான் 2அண்ணின ரகன்றவர் திறத்து மாணையான் நண்ணினர் பகைவரென் றிவர்க்கு நாளினுந் 3தண்ணியன் 4வெய்யனந் தானை 'வேந்தனே. மன்னுயிர் இன்பே தன்னுயிர் இன்பாம்

484. வைய மின்புறிற் றானு மின்புறும்

வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறும் செய்ய கோலினாய் செப்ப லாவதன் றைய தாரினா னருளின் வண்ணமே.

189

1. சூழ.

2. அண்ணியர்.

3. நண்ணுநர்.

4. வெய்யனத்.

5. LOGOT GOT C60T.