பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பெரியார் துணையுடன் பேணிச் செய்க 599. ஆமாலோ வென்று பெரியாரை முன்னின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல் போமா றறியா புலன்மயங்கி யூர்புக்குச் சாமாகண் காணாத வாறு.

வீரரின் ஆற்றல் வெஞ்சமர் உணர்த்தும்

600. நூக்கி யவர்வெலினுந் தாம்வெலினும் 'வெஞ்சமத்துத் தாக்கி யெதிர்ப்படுவர் தக்கவ ரஃதன்றிக் காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல் யாப்பினு எட்டிய நீர்.

பழமொழி 293, 61, 311

அருளின் மிக்கார்க் கரியதொன் றில்லை

601. ஆர்கலி ஞாலத் தறங்காவ லாற்சிறந்த

பேரருளி னாற்குப் பெறலருமை யாதரோ வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும் போர்மலைந்து வெல்லும் புகழ்.

இரும்பல்காஞ்சி

பெரியாரை மோதல் வரையினை மோதல்

602. அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே பெரிய வரைவயிரங் கொண்டு தெரியிற் கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார் பெரிய வரைவயிரங் கொண்டு.

-யாப்பருங்கலம் 60, மேற்கோள்

ஊக்க முடையான் உலைப்பான் பகையெலாம்

603.

உறுபடை மன்னர் தம்மை

யுடற்றியொன் றானு மின்றிச்

1. வெஞ்சமத்துள்.

சிறுபடை யவர்கள் வென்று

செகுப்பவோ வென்ன வேண்டா