பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உண்ணுநீ ரமுதங் காக்க

வூகமோ டாய்க வென்றான்.

-சீவகசிந்தாமணி 1898

பகைசிறி தென்று பார்ப்பது கேடு

658. அஞ்சனக் கோலி னாற்றா

நாகமோ ரருவிக் குன்றிற்

குஞ்சரம் புலம்பி வீழக்

1

கூர்நுனை யெயிற்றிற் கொல்லும்

2பஞ்சினு மெல்லி தேனும்

பகைசிறி தென்ன வேண்டா

அஞ்சித்தற் காக்க வேண்டு

மரும்பொரு ளாக வென்றான்.

மக்களைப் பேண மனங்கொளும் வழிகள்

659. பொருந்தலாற் பல்லி போன்றும்

போற்றலாற் றாய ரொத்தும்

அருந்தவர் போன்று காத்து

மடங்கலா லாமை போன்றும் திருந்துவேற் றெவ்வர் போலத் தீதற வெறிந்து மின்ப

மருந்தினால் மனைவி யொத்து

மதலையைக் காமி னென்றான்.

-சீவகசிந்தாமணி 1894, 1095

புகழ்ச்சி நூலுட் புகன்ற செய்தி

660. இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக மகிழ்ச்சி யின்மன மைந்துறும் போழ்தெனப் புகர்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுள் திகழ்ச்சி சென்றசெம் பொன்முடி மன்னனே

1. கூர்நுதி.

2. பஞ்சியின்.

-சூ

-FTITLD GOOD 628