பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கடைப்பிடி குலத்தொழில் கல்லா தமையும் 664. உரைமுடிவு காணா னிளமையோ னென்ற 'நரைமுது மக்க ளுவப்ப - நரைமுடித்துச்

சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமற் பாகம் படும்.

செய்தவன் உள்ளம் செய்பொருள் மேலாம் 665. செயிரறு செங்கோற் சினவேந்தன் 3செய்கை பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையுஞ் செவ்வாய் மணி முறுவற் சின்மொழி செய்தானை ஒவ்வாத பாவையோ வில்.

-பழமொழி 241, 242, 243, 6, 259

இறப்பப் பெருகி இசைபடு செல்வம் 666. இறப்பப் பெருகி யிசைபடுவ தல்லாற்

சிறப்பிற் சிறுகுவ துண்டோ அறக்கோலால் ஆர்வமுஞ் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும் இன்னாத வேண்டா விகல்வேல் மறமன்னர் ஒன்னார்க் குயர்த்த படை.

அரசிற் பிறத்தல் அறம்புரிந் தன்று 667. அறம்புரிந்தன் றம்ம வரசிற் பிறத்தல் துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலீயார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு

-தகடூர் யாத்திரை

மன்னவன் தன்னொளி மாநிலங் காக்கும்

668. உறங்கு மாயினு மன்னவன் தன்னொளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்

1. நரைமுதிர்.

2. பாதம்.

3. தீமை.