பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பி 'னஃதன்றோ சூட்டறுத்து வாயி விடல்.

கொடுஞ்செயல் வேந்தும் கூற்றும் ஒப்பே

2

675. கூற்ற முயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து மாற்ற முடையாரை யாராயா - தாற்றவும் முல்லை புரையு முறுவலாய் செய்வதென் வல்லை யரசாட் கொளின்.

அழுத கண்ணீர் அழிக்கும் கூற்று

676. தோற்றத்தாற் பொல்லார் துணையிலார் நல்கூர்ந்தார் மாற்றத்தாற் செற்றா ரெனவலியா ராட்டியக்கால்

3.

ஆற்றா தவரழுத கண்ணீ ரவையவர்க்குக். கூற்றமாய் வீழ்ந்து விடும்.

237

பழமொழி 250, 246, 254, 47

அரசு கோடின் அழியும் ஒழுக்கம்

677. கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கள் 'மிஞ்சி நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடிப் பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்.

-சீவகசிந்தாமணி 255

முறையிலா அரசில் முந்து நிற்பவை

678. நிறையி னீங்கிய மகளிர் நீர்மையும் பொறையி னீங்கிய தவமும் பொங்கருட் டுறையி னீங்கிய அறமுந் தொல்லையோர் முறையி னீங்கிய வரசின் முந்துமே.

ராமா. அயோத் 1183

1. னஃதாலச்,

2. போழ்துங்.

3. ரவரவர்க்குக்.

4. விஞ்சி.