பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ் வளம் 17

மாண்பிலா அரசில் மாரியும் பொய்க்கும்

679. தற்பாடு பறவை பசிப்பப் பசையற நீர்சூற் கொள்ளாது மாறிக் கால்பொரச் சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ மழைகா லூன்றா வளவயல் விளையா வாய்மையுஞ் சேட்சென்று கரக்குந் தீதுதரப் பிறவு மெல்லா நெறிமாறு படுமே

கடுஞ்சினங் கவைஇய காட்சிக்

கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே.

65. வெருவந்த செய்யாமை

ஆசிரியமாலை

("பிறர்க்கு அச்சம் வருவன செய்யாமையும் தனக்கு அச்சம் வருவன செய்யாமையும் கூறுதல்” - மணக்.

(வெரு -அச்சம். வெருவருதல் - அஞ்சுதல்)

இ. பெ.அ: திருக். 57.)

வலியவன் வாட்டின் எளியவன் என்செயும்? 680. 'காப்பிறந் தோடிக் கழிபெருஞ் செல்வத்தைக் 2கோப்பரியான் கொள்ளிற் கொடுத்திரா தென்செய்வர் நீத்த பெரியார்க்கே யாயினு 'மிக்கவை மேவிற் பரிகார மில்.

681.

கனிவிலா அரசிற் காடே நன்று

-பழமொழி 386

தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயின் போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் மாயினம் படர்வ தெல்லாம் வையகம் படரு மன்றே.

1. காப்பிகந்.

2. கோப்பெரியான். 3. மீத்தவை.