பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ் வளம் 17

66. கண்ணோட்டம்

("தன் உறவினரும் நண்பரும் தன்னொடு பழகியவரும் தன்னொடு தொடர்புடையவரும் தனக்கு உதவினவரும் எளிய வரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு’

பாவாணர்.

இ.பெ.அ: திருக். 58. நீதிக். 51.)

அழிபகை ஆயினும் அருள்வர் பெரியர்

685. தெற்றப் பகைவ ரிடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற நவைக்கப் படுந்தன்மைத் தாயினுஞ் சான்றோர் அவைப்படிற் சாவாது பாம்பு.

உருத்து வெகுளார் உயர்பெரு மக்கள்

686. 'எல்லை யெனவின்றி இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளா ருலகாண்டு மென்பவர்

சொல்லின் வளாஅய்த்தந் தாணிழற்கீழ்க் கொள்பவே கொல்லையிற் கூழ்மரமே போன்று.

-பழமொழி 86. 256

அருளே கண்ணுக் கணிகலம் ஆகும்

687. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங் குறியுடையார் கண்ணே யுள.

கண்ணென லாமோ கண்ணோ டாததை?

-திரிகடுகம் 52

688. ஒன்று நரம்பென்கோ வொன்றாத வென்பென்கோ இன்றசை தானென்கோ யாதென்கோ - மென்றொடையாழ்

1. எல்லையொன் றின்றியே.

2. இன்னாத செய்தாரை.