பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஐய.

புறத்திரட்டு

பூண்டகு மார்ப பொருடக்கார் வேண்டாமை வேண்டிய தெல்லாந் தரும்.

தலைவன் ஏவினால் தாழா துஞற்றுக

789. வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும் பெற்றிலே மென்பது பேதைமையே - மற்றதனை 'எவ்வ மிலராகிச் செய்க வதுவன்றோ செய்கென்றா லுண்கென்னு மாறு.

அவர்பொரு ளாலே அவர்க்கோர் உதவியோ?

790. பன்னாள் தொழில்செய் துடைய கவர்ந்துண்டார் இன்னாத செய்யாமை வேண்டி யிறைவர்க்குப் பொன்யாத்துக் கொண்டு புகுதல் குவளையைத் தன்னாரால் யாத்து விடல்.

267

பழமொழி 269, 273, 267, 279

மன்னவன் மதிக்கின் மக்களும் மதிப்பர்

791. வேந்தன் மதித்துணரப் பட்டாரைக் கொண்டேனை மாந்தரு மாங்கே மதித்துணர்ப - ஆய்ந்த

நலமென் கதுப்பினாய் நாடிநெய் பெய்த கலமேநெய் பெய்து விடும்.

ஆள்வோர் துணைபெறின் அச்சமும் உண்டோ?

792. செருக்கெழு மன்னர்த் திறலுடையார்ச் சேர்ந்தால் ஒருத்தரை யஞ்சி யுலைதலு முண்டோ

793.

உருத்த சுணங்கி னொளியிழையாய் கூரி தெருத்து வலியதன் கொம்பு.

தலைவனே நண்பெனிற் றாங்கப் பிறரார்? காவலனை யாக வழிபட்டார் மற்றவன் ஏவல் வழிசெய் திருந்தார்க் குதவடுத்தல் ஆவணைய நின்றதன் கன்று முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று.