பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

இளங்குமரனார் தமிழ் வளம் 17

நயமிலா மனத்தர் நட்பு நனிஇன்னா

957. பகல்போலும் நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா நகையாய நண்பினார் நாரின்மை யின்னா இகலி 'லெழுந்தவ ரோட்டின்னா வின்னா நயமின் மனத்தவர் நட்பு.

87. கூடா நட்பு

ன்னாநாற்பது 8

(“பகைமையான் அகத்தாற்கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம் பெறுந்துணையும் புறத்தாற் கூடி ஒழுகுவார் நட்பு" - பரிமே. இ.பெ.அ: திருக். 83. நாலடி. 24. நீதிக். 28 இ.சா.அ: பழமொழி. 15. (நட்பில் விலக்கு)) போரிற் புக்குப் புறங்காட் டுவதோ?

958. நலிந்தொருவர் நாளு மடுபாக்குப் புக்கால் மெலிந்தவர் வீழாமை கண்டு - மலிந்தடைதல் பூப்பிழைத்து வண்டு புடையாடுங் கண்ணினாய் ஏப்பிழைத்துக் காகொள்ளு மாறு.

உள்ளம் அறிவதே ஒருவர்க் கருமை

959. 2யாவ ரொருவ ரொருவர்தம் முள்ளத்தைத் தேருந் துணைமை யுடையவர் - சாரற் கனமணி நின்றிமைக்கு நாடகேள் மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு.

பழமொழி 309.

நினைத்ததை முடித்திட நீரிலுங் கிடப்பர்

960. செறிப்பில் பழங்கூரை சேறணை யாக இறைத்து நீ ரேற்றுங் கிடப்பர் - கறைக்குன்றம் பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட தங்கரும முற்றுந் துணை.

1. னெழுந்தவ ரோடின்னா.

2. WIT 91-