பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

இளங்குமரனார் தமிழ் வளம் 17

தீக்கடை கோல்போல் தீண்ட எரிப்பவர்

1048. கரணம் பலசெய்து கையுற் றவர்கட் கரண மெனுமில ராற்றிற் கலந்து

திரணி யுபாயத்திற் றிண்பொருள் கோடற் கரணி ஞெலிகோ லமைவர வொப்ப.

நாடொறுந் தேயும் நகைமதி ஒப்பவர்

1049. நாடொறு நாடொறு நந்திய காதலை

நாடொறு நாடொறு நைய வொழுகலின் நாடொறு நாடொறு நந்தி யுயர்வெய்தி நாடொறுந் தேயும் நகைமதி யொப்ப.

-வளையாபதி 51, 52, 53, 54, 55, 56

புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்பவர் 1050. 'வனப்பில ராயினும் வன்மையி லோரை நினைத்தவர் மேவர நிற்பமைக் காவர்தாங் கனைத்துடன் வண்டொடு தேனின மார்ப்பப் புனத்திடைப் ‘பூத்ததோர் பூங்கொடி யொப்ப.

வாணிகர் கலமென வாய்த்த தன்மையர்

1051. தங்கட் பிறந்த கழியன்பி னார்களை வன்கண்மை செய்து வலிய விடுதலின் இன்பொரு ளேற்றி யெழநின்ற வாணிகர்க் கங்கட் பரப்பகத் தாழ்கல மொப்ப.

பண்பாய் வழிபடும் பத்தினி போல்பவர் 1052. ஒத்த பொருளா னுறுதிசெய் வார்களை யெத்திறத் தானும் வழிபட் டொழுகலிற் பைத்தர வல்குற்பொற் பாவையி னல்லவர் பத்தினிப் பெண்டிர் “படியும் புரைப.

2. வண்மையி.

4. படிவம்

1. 62160TL 60T.

3 பூத்த.