பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

இயல்பிலார் பின்சென் றேதும் உரையேல் 1094. என்பா யுகினு மியல்பில்லார் பின்சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார் - தம்பா 'டுரையாமை முன்னுணரு மொண்மை யுடையார்க் 2குரையாரோ தாமுற்ற நோய்.

பழிவழிப் படாத பசிநலம் பெரிதே

1095. இழித்தக்க செய்தொருவ னார வுணலிற் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ விழித்திமைக்கு மாத்திரை யன்றோ வொருவற் கழித்துப் பிறக்கும் பிறப்பு.

மான மழுங்கிட வானமும் வேண்டா

1096. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் - இடனுடைய வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் மான 3மழுங்க வரின்.

வருவன வனைத்தும் வந்தே தீரும்

1097. தம்மை யிகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க என்னை யவரொடு பட்டது - புன்னை விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கு முறும்.

337

-[5/TOULQ_UIIT 298, 292, 302, 300, 117

உள்ளங் குறைபட உரவோர் வாழார்

1098. பறைபட வாழா வசுணமா வுள்ளங்

குறைபட வாழா ருரவோர் - நிறைவனத்து நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் 'தனக்கொவ்வாச் சொற்பட்டாற் சாவதாஞ் சால்பு.

-நான்மணிக்கடிகை 2

1. டுரையாமன்.

2. குரையாரே.

3. மழிய.

4. தமக்கொல்லாச்.