பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

இளங்குமரனார் தமிழ் வளம் 17 வேண்டினு நன்றுமற் றென்று விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு.

-நாலடியார் 169, 159

வானுல கெய்தி வாழும் தகைமையர்

1134. நகைநனி தீது துனிநன்றி யார்க்கும் பகைநனி தீது பணிந்தீயா ரோடும் இவைமிகு பொருளென் றிறத்த லிலரே வகைமிகு வானுல கெய்திவாழ் பவரே.

தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர்

1135. உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்

புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்

அன்ன மாட்சி யனைய ராகித்

தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கென முயலுந ருண்மை யானே.

வளையாபதி 64

-புறநானூறு 182

101. நன்றியில் செல்வம்

(“அறத்தையும் இன்பத்தையும் பயவாத செல்வத்தின் இயல்பு கூறுதல்” - மணக்.

“ஈட்டியாற்கும் பிறர்க்கும் பயன்படுதல் இல்லாத செல்வத்தினது இயல்பு. - பரிமே.

இ.பெ.அ: திருக். 101. நாலடி. 27. பழமொழி. 23. ப.பா.தி. 6. நீதிக். 63.)