பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

இளங்குமரனார் தமிழ் வளம் 17

படைவௌம் தடுத்தான் பாய்மாக் கொடுத்து 1289. தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான் வாட்டானை வெள்ளம் வரவஞ்சி - மீட்டான் மலையா மறமன்னன் மால்வரையே போலுங் கொலையானை பாய்மாக் கொடுத்து.

நேரார் பணிய ஆறினான் வேந்தன்

1290. கூடி 'முரசியம்பக் கொய்யுளைமா முன்னுகளப் பாடி பெயர்த்திட்டான் பல்வேலான் - கோடி நிதியந் திறையளந்தார் நேராரு 'நின்கீழ் முதியமென் றாறி முரண்

-புறப்பொருள் வெண்பாமாலை 52, 45

அழகிது நங்கள் அரச வாழ்க்கையே!

1291. உழுதுநன் கடன்கழித் துண்டு வேந்தரை வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போல் எழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதேல் அழகிது பெரிதுநம் 3மரச வாழ்க்கையே.

வாளினால் வந்த பயனென் னோதான்? 1292. நாளினுந் 'திறைநுமக் குவப்பத் தந்துநா டாளுது மன்றெனி லழிது மேலெம் தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ் வாளினும் பயனெனோ மழீஇய மாந்தர்காள்.

-சூளாமணி 685, 686

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே

1293. நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின் மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை வளிமிகின் வலியு மில்லை யொளிமிக் கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி

1. முரசிரங்கக்.

2. (ந்)தன்கீழ்.

3.மரசு.

4. திறையினு முவப்பத்.