பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

கொற்ற வேந்தர் வரினுந் தற்றக

வணங்கார்க் கீகுவ னல்லன் வண்டோட்டுப் பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற் றுணங்குகல னாழியிற் றோன்றும் ஓரெயில் மன்ன னொருமட மகளே.

மாற்றா மாறா மறலிய சினத்தன்

1298. வேந்துகுறை யுறவுங் கொடாஅ னேந்துகோட் டம்பூத் தொடலை யணித்தழை யல்குற் செம்பொறிச் சிலம்பி னிளையோள் 'தந்தை எழுவிட் டமைந்த திண்ணிலைக் கதவி னரைமண் ணிஞ்சி நாட்கொடி நுடங்கப் புலிக்கணத் தன்ன கடுங்கட் சுற்றமொடு மாற்ற மாறான் மறலிய சினத்தன்

பூக்கோ ளெனவேஎய்க் கயம்புக் கனனே 2விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற் சுணங்கணி வனமுலை யவளொடு நாளை மணம்புகு வைக லாகுக வொன்றோ ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பி னேரிலை யெஃக மறுத்த வுடம்பொடு வாரா வுலகம் புகுக வொன்றெனப் படைதொட் டனனே குரிசி லாயிடைக் களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப் பெருங்கவி னிழப்பது கொல்லோ மென்புல வைப்பினித் தண்பணை யூரே.

பிறந்த வூர்க்குப் பெருந்தீ அன்னாள்

1299. நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையும் நெடிய வல்ல பணிந்துமொழி யலனே 3ஈதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை

1. தாதை.

2. வயங்கிழைப். 3. இஃதிவர்

387