பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

யாமங் கொள்பரு மொழிய மேனாட் கொல்படை மொய்த்த குன்றுயர் விழுப்புண் நெய்யிடைப் பஞ்சு சேர்த்திப் பையெனக் கருங்குரல் நொச்சி மிலைந்த

திருந்துவேல் விடலை காப்பமைந் தனனே.

குறைநாள் மறவீர் குறுக லோம்புமின்

1343. இவனே, பொறிவரி யன்ன பொங்குளை வயமான் மேலோன் யாரென வினவிற் றோலா

உரனுடை யுள்ளத் தொன்னா ருட்குஞ் சுரையமை நெடுவேற் சுடர்ப்பூ ணோனே அவனே யெம்மிறை யீதவன் மாவே கறுவுகொள் நெஞ்சங் கதுவவந் தனனே யாவருங், குறுக லோம்புமின் குறைநாண் மறவீர்

நெருந லெல்லி நரைவரு கடுந்திறற்

பருமத யானை பதைப்ப நூறி

யடுகளத் தொழிந்தோன் றம்பி தொடுகழல்

நொச்சித் தெரியல் நெடுந்தகை

அச்ச மறியா னாரணங் கினனே.

399

-தகடூர்யாத்திரை

அரக்கர் கோமான் அமைத்த நொச்சி

1344. மேலது வானத்து மூவா நகருங்

கீழது நாகர் நாடும் புடையன

திசைகாப் பாளர் தேயக் குறும்புங்

கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் றந்த

பல்வேறு விழுநெதி யெல்லா மவ்வழிக்

கண்ணுதல் வானவன் காதலி னிருந்த குன்றேந்து தடக்கை யனைத்துந் தொழிலுறத் தோலாத் துப்பிற் றாணிழல் வாழ்க்கை 'வலம்படு மள்ளர்க்கு வீசி யிலங்கையில் வாடா நொச்சி வகுத்தனன்

மாலை வெண்குடை யரக்கர் கோவே.

-ஆசிரியமாலை