பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

இளங்குமரனார் தமிழ் வளம் 17 இன்று, வேழக் கோடு மடுத்துளங் கிழிப்பப் பேழைப் பாம்பின் வரிக்குடர் துயல்வரத் தம்மிறைக் கொத்த செம்மலொடு செருநவி லாளன் சேர்ந்தன னிலனே.

எதிர்ந்த மள்ளர் எஞ்சுவர் கொல்லோ

1359. மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி மன்ற வேம்பி னொண்குழை மிலைந்து தெண்கிணை முன்னர்க் களிற்றி 'னியலி வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே

எஞ்சுவர் கொல்லோ பகறவச் சிறிதே.

122. தானை மறம்

புறநானூறு 79

(தானை என்பது காலாட் படை. அப்படை வீரர்களின்

ஆற்றல் மிகுதியைச் சொல்லியது.

மேற்: தொல். பொருள். 72. பு.வெ.மா. 129.)

வாள்வௌம் வரினும் ஆளுடன் போகான்

1360. கடுங்கண் மறவன் கீகனல்விழியாச் சீறி

நெடுங்கைப் பிணத்திடையே நின்றான் - நடுங்கமருள் ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி வாள்வெள்ளந் தன்மேல் வரை.

எஃகம் பறித்தான் எதிர்ப்பவர் நிலையென்? 1361. மொய்யகத்து மன்னர் முரணினி யென்னாங்கொல் கையகத்துக் கொண்டான் கழல்விடலை - வெய்ய விடுசுடர் சிந்தி விரையகலம் போழ்ந்த

படுசுட ரெஃகம் பறித்து.

1. னிகலி.

2. கனல்விழியாற். 1355 முதல் 1358 வரையுள்ள நான்கு பாடல்கள் எந்நூலைச் சேர்ந்தவை என அறியக் கூடவில்லை.