பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412

இளங்குமரனார் தமிழ் வளம் 17 கரைபொரு முந்நீர்த் திமிலிற் போழ்ந்தவர் கயந்தலை மடப்பிடி புலம்ப

இலங்குமருப் பியானை யெறிந்த வெற்கே.

வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி

1386. கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி நடுங்குபனிக் களைஇயர் நோரரி பருகி வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி பண்ணற்கு விரை நீயே நெருநை

எம்முற் றப்பியோன் றம்பியொ டொராங்கு நாளைச் செய்குவ மமரெனக் கூறிப் புன்வயி றருத்தலுஞ் செய்யான் 3வன்மான் கடவு மென்ப பெரிதே யதுகேட்டு வலம்படு முரசின் வெல்போர் வேந்தர் இலங்கிரும் பாசறை நடுங்கின்

றிரண்டா காதவன் கூறிய தெனவே.

-புறநானூறு 299, 303, 304

துணையிலா ஒருவன் இணையிலா ஆண்மை

1387. உருவப் புள்ளியி னுட்குவரு கடுந்திறற்

குருகுபறந் தன்ன வெள்ளை மாயோன் முருகுமா மாயனிவன் யாவன் கொல்லோ வயவே றிருக்குங் கண்ணியுந் திருத்துந் துணையோ தஞ்ச மில்லை கிணையெனக் கண்ணார் நடுவட் டோன்றித்தன்

பண்ணியற் புரவி யாய்தல் தகுமே.

124. யானை மறம்

(மதஞ் செருக்கிப் போர்க்களத்தை அலறச் செய்தல் வல்ல யானையின் வீரத்தை மிகுத்துக் கூறியது.

1. வேந்தர்.

மேற்: தொல். பொருள். 72. பு.வெ.மா. 132.)

பொருள்.72.பு.

2. நாளரி

3. பன்மான். 1387 இப்பாடல் எந்த நூலைச் சேர்ந்ததென்று தெரியவில்லை.