பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அளியர் தாமே அவன்கைப் பட்டோர் 1403. ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே கார்ப்பெய லுருமின் முழங்க லானாதே

யார்கொ லளியர் தாமே யாராற்

செறியத் தொடுத்த கண்ணி

கவிகை மள்ளன் கைப்பட் டோரே.

125. மூதில் மறம்

புறநானூறு 81

(பழமையான வீரர் குடியிற் பிறந்த ஆடவர்க்கே அன்றி. அக் குடியிற் பிறந்த மகளிர்க்கும் வீரமுண்டு என்பதைச் சிறப்பித்துக்கூறுவது.

1. மையம்.

மேற்: தொல். பொருள். 79. பு.வெ.மா. 175) தொல்.பொருள்.79.பு.

வாள்வாய் முயங்கும் வளமே வளமாம்

1404. தருமமு மீதேயாந் தானமுமீ தேயாங் கருமமுங் காணுங்கா லீதாஞ் - செருமுனையிற் கோள்வாய் மறவர் தலைதுமிய வென்மகன் வாள்வாய் முயங்கப் பெறின்.

அன்பால் தன்னுயிர் மறக்கும் அணங்கு

1405. இன்ப முடம்புகொண் டெய்துவீர் காண்மினோ அன்பி னுயிர்மறக்கு மாரணங்கு - தன்கணவன் அல்லாமை யுட்கொள்ளு 'மச்சம் பயந்ததே புல்லார்வேல் மெய்சிதைத்த புண்.

அவிழ்பூ வென்ன அம்பணைக் கிடந்தோன்

1406. எற்கண் டறிகோ வெற்கண் டறிகோ என்மக னாத லெற்கண் டறிகோ

கண்ணே கணைமூழ் கினவே தலையே 'வண்ண மாலை வாள்விடக் குறைந்தன

வாயே, பொருநனைப் பகழி மூழ்கலிற் புலால்வழிந்