பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

இளங்குமரனார் தமிழ் வளம் 17

செஞ்சோற் றருங்கடன் வெஞ்சமத் தாற்றிக் களிறுதலை யடுத்து மாகா னீட்டிப் பிளிறுகுரல் முரச மெத்தனை யாகப்

பருந்தின் செந்நிழற் பந்த ராக

அழிபிணக் குன்றே வேலி யாகக்

கழுகுணக் கிடந்த காளை

நும்மகன் கொல்லோ யானறி யேனே.

கழித்தனன் ஒள்வாள் களிறுகள் வீழ்ந்தன

1410. வாழிய துடிய வாழிய துடிய

என்மகன், ஆர்த்தெறிந் தனனோ வெறிந்தார்த் தனனோ ஆர்த்து மெறியா னெறிந்து மாரான்

கையது வேலே காலது கழலே

மெய்யது சினமே மேற்சென் றனனே வேந்த ரெல்லாந் தன்னோக் கினரே நோக்கி நோக்கா முறுவலன் றாக்கித் தழீஇந்தா மென்னத் தண்ணுமை கழித்தா னொள்வாள் வீழ்ந்தன களிறே.

களிறு வீழ்த்தல் காளையர் கடனே

1411. ஈன்று புறந்தருத லென்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள்' வெஞ்சம முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

1407. “இத் தகடூர் யாத்திரை கரியிடை வேலொழியப் போந்ததற்குத் தாய்தபவந்த தலைப்பெயனிலை" என்பார். நச். தொல்.புறத். 79.

1408. இப்பாடலின் கடையிரண் டடிகள் சிதைவுற்றன.

1408 - 1410 இம் மூன்று பாடல்களும் எந்நூலைச் சேர்ந்தவை என அறியக்கூடவில்லை. 1. னம்மகன்.