பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட் டண்பணை யாளும் வேந்தர்க்குக்

கண்படை யீயா வேலோ னூரே

-புறநானூறு 26, 31, 322

ஞாயிறும் மதியும் நிலஞ்சேர்ந் தனவோ?

1462. மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல

ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅய் குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை புணங்கப் பண்ணிப் பிணியுறு முரசங் கொண்ட காலை நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச் சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய

முலைபொலி யாக முருப்ப நூறி

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர

அவிரறல் கடுக்கு மம்மென்

குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே.

எழுவ ரடங்க ஒருதா னானோன்

1463. ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும் புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை

இன்றி னூங்கோ கேளலந் திரளரை மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய் 'கண்ணி 2ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் பீடுஞ் செம்மலு மறியார் கூடிப்