பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

22.

23.

24.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இளமை கழிந்தது; இன்பம் ஒழிந்தது கழிந்த திளமை களிமயக்கந் தீர்ந்த தொழிந்தது காதன்மே லூக்கஞ் - சுழிந்து கருநெரியுங் கூந்தலார் காதனோய் தீர்ந்த தொருநெறியே சேர்ந்த துளம்.

-வீரசோ. அலங். 26 மேற்.

கோலக் குழலும் காலக் கனலும்

நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலுங் கொடுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக் கனலெரியின் மேவன கண்டாலும்

சால மயங்குவ தென்வாழி நெஞ்சே.

வளையாவதி. 3. யாப். வி. 93.

9. (43) மெய்யுணர்தல்

துறவிக் கின்பம் தோற்றுமெய் யுணர்வே

கற்நுத் துறைபோய காதலற்குக் கற்பினாள் பெற்றுக் கொடுத்த பெருமகன்போல் - முற்றத் துறந்தார்க்கு மெய்யுணர்வு தோற்றுவதே யின்பம் இறந்தவெலாந் துன்பமலா தில்.

-பெருந்தொகை. 339.

10. (44) அவாவறுத்தல்

பற்றற எவையும் பரிவறத் துறக்க

25.

உலகே,

முற்கொடுத்தார் பிற்கொளவும்

பிற்கொடுத்தார் முற்கொளவும்

உறுதிவழி யொழுகு மென்ப