பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

92.

93.

94.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பனிக்கடல் ஒக்கும் படைக்கடல் மாண்பு

அனைத்துலகுஞ் சூழ்போ யருநிதியங் கைக்கொண் டினைத்தளவைத் தென்றற் கரிதாம் - பனிக்கடன் மன்னவநின் சேனைபோன் மற்றது நீர்வடிவிற் றென்னு மிதுவொன்றே வேறு.

-வீரசோழியம். அலங். 23. மேற்.

தானே களத்தைத் தாங்கிய மறவன்

'மாநாக முன்னுயர்த்தான் சேனை களமுழுதுந் தானா வருமதனைத் தாங்கினான் - மேனாள் அருகணையா வண்ண மடற்போரின் வென்று வருகணையான் பெற்ற மகன்.

-வீரசோழியம். பொருட். 15. மேற்.

வேல்திரித் திட்டு விரும்பி நகுதல் 2மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்க ணோக்கிச் சிறிய

கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன்

வேறிரித் திட்டு நகுதலு நகுமே.

-தகடூர்யாத்திரை. தொல். பொருள். 63. நச். மேற்.

1. மானாக.

2. இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது என்பார் நச்.