பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

139.

இளங்குமரனார் தமிழ் வளம் 17

டூழி யூழி வாழி

யாழி மாநில மாழியிற் புரந்தே.

தொல்.பொருள். 81. நச். மேற்.

சூலம் பிடித்த காலக் கடவுள்

எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தார் அகலத்தன் பொன்றா ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட் காடமர்ந் தாடிய வாட னீடிப்

புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரலனிரண் டுருவா யீரணி பெற்ற வெழிற்றகைய னேரு மிளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக்

காலக் கடவுட் குயர்கமா வலனே.

-தொல்.பொருள். 81. நச். மேற்.

புறத்திரட்டு பின்னிணைப்பு – 1

முற்றும்.