பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

இளங்குமரனார் தமிழ் வளம் 17

-

அமைந்த. முறிஇலை தளிரிலை. கண்ணி - தலையில் சூடும் பூ. 'கண்ணிகார் நறுங்கொன்றை’ புறம். 1. மன்னர் அறியுநர் மன்னராலும் அறியப் பெற்றவர். செருக்கு - பெருமிதம். யாற்றுக் கற்சிறை போல நடுங்காது நிற்பவற் கல்லால் மன்னர் அறியுநர் என்னும் செருக்கு எளியவோ? இப்பாடல் வருவிசைப் புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமைக்கு மேற்கோள். தொல்.பொருள். 63. நச்.

(1318) பெய்தண்தார் - சூடிய தண்ணிய மாலை. “பிறந்த பொழுதேயும்” - இளமை சுட்டியது. முற்றுழிக் கண்ணும் முதுமையுற்ற போதும். உற்றுழி - உற்ற இடத்து, உதவி செய்தற்கு உரிய இடத்து. கோமான் - அரசன். மன்னர்க்கு உடம்பு கொடுத்தார் பிறந்த பொழுதேயும் மூத்தார். கோமாற் குற்றுழிக் காவாதவர் முற்றுழிக்கண்ணும் இளையர். செயலால் இளையர் முதியர் என்பதாம். 'காவாதவர்' என்பதினும் சாவாதவர்' என்பது பொருந்திய பாடமாம்.

(1319) பரவை வேல்தானை

-

-

-

-

கடல்போன்ற வேற்படை எறியென்றாய் - அழிக்க என்றாய். விரை விரைந்து - மிக விரைந்து. அல்லாவிடின். என்னைச் சொல்லிய நா பகலில் அன்றி அஞ்சுவேன் எனக் கருதி இரவில் எறியக் கூறிய நா. புகுவதோ மீண்டும் உள்ளே புகுமோ? அறுத்திருப்பேன் என்பதாம். இரவில் மறைந்து போரிடல் இழிவு எனக் கருதினானாம், ஒரு வீரன் கூற்று. (1320) வான் வணக்கியன்ன

GÓI

-

-

-

வானையும் வளைப்பது போன்ற. வலிதரு வலிமையமைந்த. எஃகம் - வேல். தானும் அவ்யானையும். நலம் - பெருமிதம். என்கையில் எஃகம் உ உளது. அதற்கு இல்லை. அன்றியும் யான் மனிதன். அது விலங்கு. எனக்கு இரண்டு கைகள். அதற்கு ஒரு கை. அதனால் அதனை வெல்லல் எனக்கு நாணுத்தரும்.

(1321) எறியான் - வெட்டான். களிற்றெருத்தின் - யானைப் பிடரின். அம்ம - வியப்பு இடைச்சொல். தருக்குதல் - செருக்குக் கொள்ளுதல். சான்றோன் மகன் - வீரனின் மகனாகிய வீரன். காலாள், 'கால் ஆள்' என்னும் பொருள் தருதலால் (முழு ஆள் அல்லாமையால்) அவனை வெட்டியழியான். யானை மேல்