பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகம் அறிந்த தமிழறிஞர். மாணவர், இளைஞர், மற்றவர் என்று அனைத்துத் தரப்பினர்க்கும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர். தமிழ் என்றது தமிழத்தை. அறிஞர்க்கும் அவரது நூல்கள் தேனடைகள். வள்ளுவத்தை வாழ்வியலாக்கித் தமிழியத்தைத் தழைத் தோங்கச் செய்பவர்.

ஐம்பத்தெந்து

9

ஆண்டுகளாக அரும்பணியாற்றி எண்பதில் நுழையும் இளைஞர்; ஓய்வறியா உழைப்பாளர். தமிழால் அவரும் அவரால் தமிழும் வளர்வது நம் பெருமை. தமிழுக்கு எத்தனை முகங்கள். ஆயிரம் முகங்களில் ஐயா ஒருமுகம்; தமிழ் வளர்க்கும் திருமுகம், தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவரே அவரைப் ‘புல்' என்றாலும் அவர் புல் அல்லர்; புலி, தமிழ்ப்புலி இலக்கியப் புலி; இலக்கணப் புலி.

.

தமிழர் பற்ற வேண்டிய புளியங்கொம்பு இளவழகன் பற்றியுள்ளார். தமிழ்மண் செழிக்கும்!

- ந. அரணமுறுவல்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்

வளவன் பகுப்பகம் சென்னை - 600 017