பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

தருங்கருணை யில்லாத புல்லர் வாழ்வில் தண்டிகையின் மீதேறிச் சம்பத்தேறிக் கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்

காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்'

87

தீயர் செல்வக் கொடுமை இத்தகைத்து; நல்லோர் வறுமையினால் உலகுக்குக் கேடு என்ன?

66

நல்லோர் தமக்கு உற்றவறுமையை வறுமை என்று கருதுவார் அல்லரே. பிறருக்கு உதவ முடியாத நிலைமை ஒன்று தானே அவர்கள் வறுமை. 'நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல். செயுநீர செய்யாதமைகலா வாறு” என்பதன்றோ குறள்நெறி. இத்தகையர் தம் வறுமையையோ வறுமை எனக்கொள்வர்?

அல்லல்பட்டு ஆற்றாது அழப்படுத்துகிறது புல்லியர் செல்வம். அதனை மாற்றித் தேற்றுதற்கும் ஆற்றுதற்கும் விழைகின்றது நல்லுள்ளம். அதற்குத் துணையாகா வண்ணம் வறுமை குறுக்கிட்டால் அவ்வறுமை உலகோர் வறுமை யாவதன்றி அவ்வுயர்ந்தோர் வறுமையாமோ?

முதிரத்துக்கோமான் குமணன் தன் நாடு இழந்ததற்கு வருந்தினனோ? இல்லை ‘பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என நைந்து மொழிகின்றான். இத்தகையன் வறுமை அன்றோ உலக வறுமை; - உயர்ந்தோர் வறுமை

இத்தகைய உணர்வினால் அன்றோ வான முட்டும் வளமார்ந்த அரண்மனைக்கண் இருந்தும், வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி, பொன் கொழிக்கும் வளநாடாண்ட குராப்பள்ளித்துஞ்சிய பருந் திருமாவளவனையும்

பொருட்டாக எண்ணாமல்.

உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்

நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும்’

என்று கூறிச் செல்லுகிறார் மாடலன் மதுரைக் குமரனார். அவர் எந்நெறியில் பேசினார்? குறள் நெறியில் பேசினார். அந்நெறியாது?

66

“ நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார் கண் பட்ட திரு.