பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

வழங்கிய

வாழ்வியல் வளம்

குறளுக்குக் குறளாகவே பாராட்டு வள்ளுவமாலைப் பாட்டுகள் இரண்டு உண்டு. அவை;

66

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

66

குறுகத் தறித்த குறள்"

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்

என்று வருவன. முறையே இடைக்காடர், ஒளவையார் பெயர் களால் உள்ளவை. இரண்டும் குறள் என்பதை நிரையசையாகக் கொண்டு நிறைந்தவை.

வ்வாறே பொன்முடியார், நரிவெரூஉத் தலையார், என்பார் பெயரால் உள்ள வெண்பாக்கள் இரண்டிலும் (14,33) குறள் என்னும் முடிவுள

குறட்பாவின் அளவுச் சிறுமையையும், பொருட் பெருமையையும் உட்கொண்டே கடுகுக, அணு என்பவற்றை உவமை காட்டி, அவற்றைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டி வைத்ததை, ஊடே வெட்டினால் உண்டாகும் வெள்ளப் பெருக்கெனப் பொருட் பெருக்குள்ளது என்பதைக் காட்டினர்.

இதில் 'ஏழு கடல்' என்றது ‘ஏழுசீர்’களைக் கருதியது. ஒவ்வொரு சீரும் ஒருகடல் போன்றது என்னும் குறிப்பினது. இனித் தினையளவு தானும் இல்லாத புன்னுனிப் பனி நீரில் நீண்ட பனையும் தெரியுமாறு போலக் குறட்பாவில் பொருள் விரிவுண்டு என்பதைத்

66

தினையளவு போதாச் சிறுபுன்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்

என்னும் வள்ளுவமாலைப் பாட்டு காட்டும் (5: கபிலர்)

தொன்ம நூல்கள், திருமால் ‘குறள்’ வடிவாக வந்து ஈரடியால் உலகம் அளந்த கதையைக் கூறும். அதனை உட்கொண்ட வள்ளுவ மாலைப் பாடல்கள் இரண்டுள. குறள் வடிவ உருவமும் ஈரடிப்பாவும் தூண்டி நிற்க, அவை எழுந்தனவாம்6.14; பரணர், பொன்முடியார்) ஈரடியால் உலகத்தை அடக்கிய குறள் உயர்வு உரைப்பவை அவை.