பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வாழ்வியல் வளம்

“ என் அடிகள் வெண்குறள் நேர் அடியிரண்டும் என் தலையில் இறுத்தும் இறை”

என்றார்.

97

-திரு வெங்கைக் கலம்பகம் -42.

ரு

ஒரு தாய்க்கு இரண்டு: மூத்தவன்

-

பெரியவன் ஆண்:

இளையவள் - சிறியவள் - பெண்: அவர்களைச் சுட்டும் பாவேந்தர்.

66

‘திருக்குறள் ஈரடி எம்மிரு மக்கள்”

எனத் தாய் வழியாகப் பேசுகின்றார்.

எனப்

66

'திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும்

பாரதியார் திருக்குறள் நயத்திலும் விரிவிலும்

சொக்கியவராகக் கூறுகிறார்.

திருக்குறள் ‘முதற் குறள் உவமை' என்பதொரு நூல். அது கு.கோதண்டபாணியார் இயற்றியது. குறளின் ஆழமும் விரிவும் காண விரும்புவார் அந்நூலைக் காண்க. அதிலே ஒரு குறிப்பு:

“திருக்குறள் ஒரு தெளிந்த நீரோடை, அதன் உண்மையான ஆழம் ஆயிரம் அடியும் அதற்கு மேலும். அது அதனை ரண்டடியாகக் காட்டி ஏமாற்றுகிறது.

66

அடித்தளத்தில் பொன்னும் மணியும் முத்தும் பவழமும் பிறவும் நிரம்பக் கிடந்து மிளிர்கின்றன. இடையிலே வேறு சில பொருள்களும் மிதக்கின்றன. கோடையில் சூரிய ஒளி அடித்தளம் மட்டும் ஊடுருவிப் பாய்கிறது. அடியிலுள்ள பொன்னும் மணியும் பளபளவென்று மின்னுகின்றன. இடையில் மிதக்கின்ற சிப்பிகளும் கிளிஞ்சில் ஓடுகளும் மின்னுகின்றன.

66

“உற்று நோக்குபவர்கள் இரண்டடி ஆழந்தானே என்று கையை நீட்டுகிறார்கள். கை குட்டை யானது. ஓடையின் அடித்தளம் எட்டவில்லை. துழவுகிறார்கள்; ஏதோ தட்டுப் படுகிறது. அதுதான் அடியிலுள்ள பொன்னும் மணியும் என்று எடுத்துப்பார்க்கிறார்கள். தாம் முயன்று எடுத்த பொருள் அல்லவா! தம் முயற்சியில் உள்ள மதிப்புக், கிடைத்த பொருள் பொன்னா மணியா சிப்பியா கிளிஞ்சிலா என்று ஆராய