பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தன்னை உணர்விக்கும் தவக்குறள்

எளியதில் எளியது எது?

பிறர்குறை காணல் எளியதில் எளியது

அரியதில் அரியது எது?

தன்குறை காணல் அரியதில் அரியது

தன்னை உணர்ந்தவன் பிறரையும் உணர்வான் தலைவனையும்

உணர்வான்.

தன்னை உணரான் பிறரையும் உணரான்: தலைவனையும்

உணரான்.

66

66

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்”(2366)

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”(2355)

என்பவை திருமூலங்கள்.

தன்னை அறிதலை மெய்ப்பொருள் நூல்கள் விரியக் கூறும். அறங்கூறும் குறள். தன்னை அறிதலைத் தலையாய அறமாகக் காட்டி ஒளி விளக்கம் செய்கின்றது.

'மனத்துக்கண் மாசின்மையை அற' மெனக் கண்டுரைத்த அறக்குறள், 'நன்றின்பால் உய்ப்பது அறிவு' எனத் தேர்ந் துரைத்த திருக்குறள், ‘தன்னை உணர்விக்கும் தவக்குறளும்’ ஆதலைக் காட்டுவது இக்கட்டுரை:

66

நிலமிசை நீடுவாழ வேண்டும்

என்பது குறள் வாழ்த்து(3)

66

நெறிநின்றார் நீடுவாழ்வார்”

என வழிமுறை காட்டியது அவ்வாழ்த்து(6)