பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

தன்னை உணர்வான், உணர்வான்!

125

அவன் தன் உடலை விரும்புவான்; உடற்புறந் தூய்மை போற்றுவான்: அகந்தூய்மை போற்றுவான்: மனத்துக்கண் மாசுற ஓட்டான்: கண்ணின் மாசு தீமை எனினும் அதனினும் பன்னூறு மடங்கு தீயது மனத்துக்கண் மாசு அவனைத் தீராப் பழிக்கும் பாவத்துக்கும் பிறப்பி என ஆக்குவது மனத்துக்கண் மாசு அம் மாசு இலா மணியாகத் திகழ்வான், மணியாவான் மாமணி ஆவான் ஒரு மாமணியாவான் ஓங்கிய ஒரு ஒரு மாமணியாய் உலகுக்கு ஓங்கிய

·

66

மாமணியாவான். திருமாமணி”யும் ஆவான்

தன்னை உணரும் தவமணியாகத் திகழ விரும்புவான் தன்னைக் காதலிப்பவனாகத் திகழ்வான்!

அயற்பால் காதலுக்கும் முற்படவும் முதற்படவும் செய்யத்தக்க நற்காதல், “தன்னைத்தான் காதல் கொள்ளல்' என்பது வள்ளுவம்.

அவன் உடல் மட்டுமோ காதல் பொருள்? இல்லை அவன் உயிரும் காதற்று என்பது வள்ளுவம் (940)

அவ்வுயிர்க் காதல் உயிர் ஊதியக் காதலாகவும் விளங்க வேண்டும் என்பதும் வள்ளுவம் (231)

தற்காதலுடையவன் என்ன செய்தல் வேண்டும்? வள்ளுவர்

வாய்மொழிகிறார்;

66

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்”

என்பது அது (209)

66

உன்னை நீ விரும்பு: உன்னை நீ விரும்பினால், தீவினைச் செயல் எதனையும் எண்ணாமல் ஒழி" என்கிறார் வள்ளுவர். என்னை விரும்புதல் என்பது என்ன? எனக்குத் துன்ப நீக்கம் வேண்டும்: இன்ப ஆக்கம் வேண்டும். இவை உயிரிகளின் பொது நோக்கு. இது பொது நோக்கு எனப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என்னை நான் அறிந்துகொள்ளல் வேண்டும்; அப்புரிவே என் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள உதவும்: அப்புரிவே எவ்வுயிர்நோக்கும் அதுவே என்பதைத்