பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம்

18

தாமரை விளக்காம்: மேகங்கள் முழவமாம்: குவளை மலர் பார்வையாளராம்: ஆற்றின் அலை திரையாம்: வண்டின் இசை மகரயாழாம்: வண்ணமிகு வீற்றிருக்கையில் மருதவேந்து வீற்றிருக்கிறதாம்.

மலைக் காட்சி மருதக் காட்சியாயது இது என்றால், காவிரிக் காட்சி எப்படி? மலையில் மலைவைத்துக் கடலில் கால் வைத்து வளஞ்சுரக்கும் வண்மைக் காட்சியல்லவா அது! அதன் வளந்தான் எண்ணத் தொலையுமா?

301 அடிகளையுடைய பட்டினப் பாலையில் காவிரிவளம் தானே தலைப்பட்டது. அக் காவிரி வளம் போலவே கரிகால் சோழன் அந்நூலுக்கு 16 இலக்கம் பொன் பரிசு வழங்கினானே காவிரி பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்; அதன் வளத்திலே தோய்ந்து தோய்ந்து எப்படிப் பாடுகிறார்?

சுக்கிரன் என்னும் வெள்ளிமீன் கிழக்கேயிருந்து மேற்கே சன்றால் மழை பெய்யுமாம். அது திசைமாறினால் மழை பெய்யாதாம்! ஆனால் காவிரிக்கு மட்டும் அந்நிலை இலையாம். வானம்பாடிப் பறவை நீர் இல்லாமல் வாடினும் காவிரி, நீர் ல்லாமல் வாடுதல் இல்லையாம்!

மலைத்தலைய கடற் காவிரியாம்

வான் பொய்ப்பினும் தான் பொய்யாதாம் புனல் பரக்கும் பொன்னியாம்

அவர் பாடுகிறார்:

66

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

திசைதிரிந்து தெற்கேகினும்,

தற்பாடிய தளியுணவிற்

புட்டேம்பப் புயல்மாறி

வான்பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி,

புனல் பரந்து பொன்கொழிக்கும்:

விளைவறா வியன்கழனிக்

கார்க்கரும்பின் கமழாலைத்,

தீத்தெறுவிற் கவின்வாடி,

நீர்சிசெறுவின் நீள்நெய்தல்,