பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

145

இதோ, அந்நெற் கதிரை இறையடியார் காட்சியாகக் காண்கிறார் தொண்டர்சீர் பரவுவாராம் தோன்றல் சேக்கிழாரடிகள்.

நெற்கதிர் தாழ்ந்து காற்றில் தலையாட்டுகின்றது. அது அடியார் ஒருவரைக் கண்ட அடியார் தலைவணங்குவது போல் உள்ளது. அக்கதிர்க்கு முன்னே உள் கதிரும் தாழ்ந்து தலையாட்டுகின்றது. அது வணங்கிய அடியாரை வணங்கும் அடியாராகத் திகழ்கின்றது என்கிறார்.

இதோ தென்றலை ஆய்வுப் பெருமகனாகக் காண்கிறார் பரஞ்சோதியார்.

காற்று சோலையுள் புகுகின்றது: குளத்தில் தவழ்கின்றது: மலர்களில் நுழைந்து தழுவுகின்றது: மலர்ப் பந்தல்களில் தாவுகின்றது: குளிர்ச்சியும் நறுமணமும் மென்மையும் கொண்டு உலாவுகின்றது: இது அறிஞர்கள் அறிவைத் தேடுவதற்காக ஆய்வரங்கம் கருத்தரங்கம் நூலகம் படிப்பகம் எனச் சென்று சென்று அறிவைத் தேடுவது போல் உள்ளது என்கிறார்.

பாவலர் தாம் காணும் காட்சி கொண்டு மக்களுக்கு வேண்டும் பண்பாடுகளைப் படைத்துக் காட்டுதல் இவற்றால் புலப்படுமே!

6

வம்பார் குன்றம் வளர்வேங்கை நீடுயர் சாரல்

கொம்பார் சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்றாலம்".

என்று நாயனார் பாடினால்,

66

வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல்பீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர்கோன் அமரும் சோலை அணிதிருவரங்கம்

என்று ஆழ்வார் பாடுகின்றாரே!

இவையன்ன பாடல்கள் தாம் எத்தனை? எத்தனை? கோடையிலே இளைப்பற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே,

மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே

மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும்பயனே,

ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

உகந்ததண் ணீரிடைமலர்ந்த சுகந்தமண மலரே”