பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம்

18

நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!

நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை!

எங்கெங்கும் இயற்கை எழில்! துன்பம் தொலைய வேண்டுமா? இயற்கை வசப்படு! இன்பநிலைக்களம் அதுவே என்று வழிகாட்டுகிறார்! ஒளியும் காட்டுகிறார் பாவேந்தர்.

கவிமணி தேசிய விநாயகர் ஊர் தேரூர்! இரதபுரி என்பதும் அது. அதனைப் பாடுகிறார்.

66

தித்திக்கும் முக்கனிகள் எத்திக்கும் உதிர்கின்ற

செறிமரச் சோலை சூழும், தென்னிரத புரி”

சேற்றுப் பெருக்கூடு நாற்றைப் புதைக்கின்ற

செய்யகம் சூழும் ஊராம், தென்னிரதபுரி”

"தென்னையே புன்னையே மன்னிவளர் சோலை எத் திக்கினும் குழும் ஊராம், தென்னிரதபுரி”

“தேங்கா மரத்திலே மாங்காய் பறிக்கவொரு

சினைமந்தி கொக்கை நோக்கும், தென்னிரதபுரி”

என்று தம் ஊரைச் சொல்லிச் சொல்லித் தாலாட்டுகிறாரே! பிறந்த மண்ணின் பற்றுமைதான் எத்தகைய பெருமையது!

கதிரோனைக் காண்கிறோம்! நிலவைக் காண்கிறோம்! இடியைக் கேட்கிறோம்! மின்னலைப் பார்க்கிறோம்! மழை கண்டு மகிழ்கிறோம்!

அவற்றுக்கு மூலப் பொருள் ஒன்று உண்டு என்று உணர் கிறோமோ? அது பொதுமைக்கெல்லாம் பொதுமையானது என்று புரிகிறோமா? புரிந்து கொண்டால், பகையுண்டா போருண்டா? இல்லையே. இதோ புரிந்து கொண்டவர், புரியவைக்கப் பாடுகிறார். அவர் நாமக்கல்லார்:

சூரியன் வருவது யாராலே?

சந்திரன் திரிவதும் எவராலே?

காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணில் தெரிவன அவையென்ன?

பேரிடி மின்னல் எவராலே

பெருமழை பெய்வதும் எவராலே?