பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

யாரிதற்கொல்லாம் அதிகாரி

அதைநாம் எண்ணிட வேண்டாமோ?

அல்லா என்பார் சிலபேர்கள்:

அரன் அரி என்பார் சிலபேர்கள்:

வல்லான் அவன்பர மண்டலத்தில் வாழும் தந்தை என்பார்கள்;

சொல்லால் விளங்கா நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பலபேசும்,

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம் நினைந்து,

அனைவரும் ஒன்றாய் வணங்கிடுவோம்

எந்தப் படியாய் எவர தனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன?

நிந்தை பிறரைப் பேசாமல்

வந்திப் போமதை வணங்கிடுவோம்

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

149

இனி நாடகம் இலக்கியம் இல்லையா? இசைப்பாடல் இலக்கியம் இல்லையா? திரைப்பாடலும், தொலைக்காட்சிப் பாடலும், வானொலிப் பாடலும் ஒலி இழைப் பாடலும் இலக்கியங்கள் இல்லையா? ஏன் புதுப்பாவும் உரைப்பாவும் ரைநடையும், துணுக்குகளும், பழமொழியும் விடுகதையும் ஆகியனவெல்லாம் இலக்கியங்கள் இல்லையா? குறிக்கோளை இயம்பும் எல்லாமே இலக்கியங்களே. அவற்றிலெல்லாம் இயற்கை இழையோடாமல் இருப்பது இல்லை! நம் வாழ்வை இலக்கியமாக்க வேண்டுமானால் இயற்கையோடு இயைந்த வாழ்வு, இறைமையோடு இயைந்த வாழ்வு நம் வாழ்வாதல் வேண்டும்! அவ்வாழ்வு கொண்டோர் அமர வாழ்வு பெற்றோர்! இயற்கைத் தாயின் இனிய குழந்தையாக வாழ்வோர்க்கு நரையில்லை! திரையில்லை! மூப்பில்லை !முணகல் இல்லை! எங்கும் என்றும் இன்பமேயன்றித் துன்பம் இல்லை! அவ்வின்ப வாழ்வை அமர நிலையை அடைதலைக் குறிக்கொள்வோமாக.