பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

159

இளநாகனார் என்பார் தீட்டிய பாட்டோவியம் இது, பண்பட்ட நாகரிக உள்ளத்தில் இருந்து பாடுபுகழ் பெற்றது இக்காட்சி. மந்தியின் மானக் காட்சியால், மாந்தர்மானக் காட்சியைப் போற்றி வாழக் கற்பித்த கவின்கலைக் காட்சி இது. அகப் பொருளை அகப்பொருளாகப் போற்ற வேண்டும் என்பதை ஆயிரம் கதைகளிலா சொல்ல வேண்டும்? இக் காட்சி ஒன்று போதாதா?

66

கடுவன்,

முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்

கறிவளர் அடுக்கத்தில் களவில் புணர்ந்த

செம்முக மந்தி செல்குறி கருங்கால்

பொன்இணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர் குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன் புன்றலைப் பாறுமயிர் திருத்தும்”

(நற் 151)

முதல் கருவுரியெனும் முப்பொருளையும் தன்னகத்துக், கொண்ட அகப் பொருளுக்கு மட்டுமோ இயற்கையோடியைந்த மனித வாழ்வுச் சிந்தனை? புறப் பொருளுக்கும் உண்டு என்பதை வெளிப்படுத்தும் பாடல்கள் உண்டு. அவ்வகைக்கு ஒரு சான்று:

ஒரு தலைவரை அவர் தம் துணைவியர், "அவர் மண வீட்டுக்குச்சென்றால் மணமகள் போல மகிழ்வுடன் தோன்றுவார்: இறப்பு வீட்டுக்குச் சென்றால், இறப்புக் கொடுத்தவர் இவரே என்னக் கவலையுடன் இருப்பார்” என்றார். சங்க இலக்கிய இயற்கையும் சுளித்தால் களிப்பனவாய், கவன்றால் கவல்வனவாய் நெஞ்சப் பாங்கு காட்டுதலை விளக்குவது கண்கூடு. அதற்கொரு பாட்டு:

66

முல்லையே பூத்ததும் பூத்தாயே! இன்றா பூப்பது?

பூக்கும் காலத்தே பூவாமல், பூவாகக் காலத்துப் பூத்துப் பிறவிப் பயனை இழக்கின்றாயே

ஈதென்ன?

இளைய காளையர் உன்னைப் பறித்துச் சூடுவரா?

இளைய தம் காதலிக்குத்தாம் உன்னைப் பறித்துச் சூட்டுவரா? வளையணிந்த மகளிர்தாம் சூடவேண்டிப் பறிப்பரா? எட்டாமலர் என்று பாணர்தாம், தம்மெல்லிய யாழின் நரம்பு கெடா வகையில்