பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம்

18

மெல்லென வளைத்துப் பறிப்பரா?

அந்தோ! இன்று மலர்ந்தாயே!

ஆண்மைத் திறமெல்லாம் வெளிப்பட

வீரர்களையெல்லாம் வெற்றி கொண்ட

வள்ளல்சாத்தன் இயற்கை எய்திய நாளாயிற்றே இன்று! என் செய்தனை’

என்று மலர்ந்த முல்லையை நோக்கிப் பாடுகிறார் குடவாயிற் கீரத்தனார்! இது ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடிய பாட்டாசுப் புறப்பட்ட புறப்பாட்டு து (24)

ஓரறிவு உயிரியின் மேல் ஆறறிவு உயிரி, தன் உணர்வை ஏற்றி உரைத்த உணர்வுப் பதிவு தானே இது!

சங்க இலக்கியத்தில் மல்கும் ஒருபொருள், இயற்கை யோடியைந்த மனித வாழ்வுச் சிந்தனை எனின், அதனை விரிக்க விரியும்: சுருக்கச் சுருங்கும்: அது “புலவரைக் கடந்தது” எனப் புகலல் அமையும்.