பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

173

யானையுடன் என் கண்ணுள் புகுந்துள்ளான்: கண்ணைத் திறந்தேனோ என்னை விட்டுத் தப்பிப் போய்விடுவான்” என்றாள் காதல் களி மயக்கத்தில் உளறும் இதனை முத்தொள்ளாயிரப் பாட்டொன்று காட்டுகின்றது.

பகுத்தறிவுடைய

மக்களை யன்றிப் பறவைகளும் விலங்குகளும் கூடக் கனவு கண்ட நிகழ்ச்சிகளைப் புலவர்கள் படைத்துள்ளனர்.

தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் தன் பெட்டையுடன் தங்கிய கடற்காக்கை வெண்ணிற இறால் மீனைத்தான் பற்றித் தின்பதாகக் கனவு காண்பதை வெண்ணாகனார் என்னும் புலவர் கூறுகின்றார்.

கனைப்பூவில் தேனுண்ட வண்டு காந்தள் பூவில் கண்ணுறங்கி யானையின் கன்னத்தில் ஒழுகும் மத நீரை அருந்துவதாகக் கனவுச் செய்தியைத் தாயங்கண்ணனார் என்னும் புலவர் குறிப்பிடுகின்றார்.

களவு செய்யக் கருதுவார்க்கு நள்ளிரவுப் பொழுது மிகக் கொண்டாட்டமானது. களவு போகாமல் காக்க முனைவார்க்கு இந்நள்ளிரவு மிகத் திண்டாட்டமானது. பொருட்களவு செய்வாரை அன்றிக் காதற்களவுக்கும் கவின் பொழுது நள்ளிரவே ஆகும்.

களவையும் பிற கடமைகளையும் நாட்டில் ஒடுக்குதல் காவலர் கட LD. ஆதலால் பண்டை வேந்தர்கள் தாமே மாறுகோலம் பூண்டு மறுகில் திரிந்து காவல் புரிந்தனர். இதற்குப் பொற்கைப்பாண்டியன் வரலாறு சான்றாகும்.

நாட்டை நல்வழியில் நடத்தினால் மட்டும் போதுமா? வேற்று நாட்டவர் தாக்குதல் நேருங்கால் அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டியதும் ஆள்வோர் கடமையாம். அவ்வேளை களில் வீரர்கள் கண்படை கொண்டாலும் வேந்தர் கண்படை கொள்ளாது கடமை ஆற்றினர். நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளாது பாண்டியன் நெடுஞ்செழியன் பாசறைக்கண் பணி செய்வதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் புலவர் நக்கீரனார்.

ம்

·

வாடைக் காற்று வன்மையாக அடிக்கின்றது. பாண்டில் என்னும் ஒருவகை விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டு ஏவலர் வருகின்றனர்: படைத் தலைவன், வேப்பம்பூ மாலை சூட்டிய