பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வேலைத் தாங்கி, வேந்தன் முன்னே செல்கின்றான். குதிரை, தன் மேல் பட்ட மழைத்துளியை உதறிக் கொண்டு நடக்கின்றது: பாண்டியனின் இடத்தோளில் கிடந்த மேலாடை. சிறிது நழுவுகின்றது. அதனைக் கையால் அணைத்துத் தழுவிக் கொள் கிறான்; வாளேந்திய வீரன் ஒருவனின் தோள் மேல் தன் வலக்கையை வைத்துக் கொள்கிறான். போரிலே விழுப்புண் பட்டவீரர்களைத் தனித்தனியே கண்டு அளவளாவுகின்றான்: அவர்கள் செய்த செயற்கருஞ் செயல்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ்கின்றான்: அவர்கள் பட்ட புண்ணைத்தான் பட்டதாக உணர்ந்து வருந்துகின்றான்; இன்மொழியும் புன்முறுவலும் இலங்கப் பணி செய்து மகிழ்விக்கின்றான்; வேந்தன் அரவணைப்பில் வீரர் விம்மிதம் அடைகின்றனர்.

நெடுநல்வாடை காட்டும் நள்ளிரவுக் காட்சி இது. கலித்தொகை காட்டும் ஒரு காட்சியைக் காண்போம்.

6 6

ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவுப்பொழுது: ஒரு முதியவன்: முடவன்: மழுக்கைத் தலைவன்; குட்ட நோயால் காலும் கையும் குறைந்தவன்: ஒரு தெருக்கோடியில நின்றான். அங்கே அழகிய நங்கை ஒருத்தி தன் காதலன் குறிப்பித்தபடி அவனைக் காண்டற்கு வந்தாள். அங்கு நின்ற முதியவன். “மகளிர் நிற்கும் காலம் அன்றாக இவ்விடத்து நிற்கும் நீ யார்?” என்று வினாவினான் “சிறியவளே என்னாலே அசுப்படுத்திக்கொள்ளப் பட்டாய்” என்று நெருங்கினான். வைக்கோலைக் கண்ட கிழ எருது போலப் பக்கத்தில்இருந்து போகாமல் நின்றான். தையலே தம்பலந்தின்” என்று கூறி வெற்றிலைப் பையைத் திறந்து “எடுத்துக் கொள்” என்றான். நங்கை ஒன்றும் பேசாமல் துணிந்து நின்றாள். அவன் அஞ்சினான் அவளைப் பேய் என எண்ணினான். ஆதலால் விலகி நின்று “நான் ஆண் பேய்: பெண்பேய் ஆகிய நீ எனக்கு அருள்” செய்வாயாக. அவ்வாறு செய்யா தொழியின் இவ்வூரார் இடும்பலியை நீ பெறாமல் நானே எடுத்துக் கெள்வேன்” என்றான். தன்னைப் பெண் பேய் எனக் கருதி அவன் நடுங்குவதைக் கண்ட நங்கை தன் கையால் மணலை வாரி இறைத்தாள். அதனால் அவன் கடுமையாகக் கதறிப் புலம்பி ஊர்க்கெல்லாம் கேட்குமாறு கத்தினான. இச்செயல் அவள் தலைவனைச் காணுதற்குத் தடையாயிற்று. வலிய புலிக்கென அமைக்கப் பெற்ற வலையிலே சிறு நரி அகப்பட்டது போல நகைப்பிற்கு இடமான நிகழ்ச்சியாயிற்று.