பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம்

18

தோழியிடம் சொல்கின்றாள்; "தோழி! யானை முதுகில் உள்ள கயிற்றுத் தழும்பு போன்ற சிறிய மலை வழியில் நள்ளிருளில் தலைவன் வருகிறான். ஆதலால் அவன் திருவடிகளைத் தாங்கித் தாங்கிச் சென்றது என் நெஞ்சு! இஃது என்னையோ!”

தலைவன் திருவடிகளைத் தாங்கும் தாமரைத் திருமலராகத் தலைவி நெஞ்சைப் படைத்துக் கூறும் அருமை, மிக அருமையாம். இத்தகு அருமை உணர்வுகளை வழங்கும் நள்ளிரவை,

66

வாழிய இரவே, வாழிய

ஊழி உழியில் வுலகின் மேவியே”

என வாழ்த்தும் பரிதிமாற் கலைஞருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோமாக.