பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சித்தர்-திருமூலர்

எந்த

சித்தர்கள் எண்ணற்றவர்கள் இருந்துளர்: மண்ணிலும் இருந்துளர்: தமிழகத்தில் இருந்த சித்தர்களாகப் பதினெண்மரை எண்ணியுள்ளனர். அவ்வெண்ணிக்கைக்கு உட்படாத சித்தர்களும் இருந்துளர்.

சித்தர் என்பார் கள்ளம் களங்கம் கறை குறை இல்லாத தூய உள்ளத்தால் குழந்தை போன்றவர்.

ஓடி ஓடித் தேடிப்போய்த் தொண்டு செய்தலால் தாய் போன்றவர். உடல்நலப் பணிகளோடு உயிர்நலப் பணிகளும் செய்தலால் உயிர்ப்பிணி மருத்துவராகத் திகழ்ந்தவர்.

L

உலகததுக்காகத் தங்களைத் தருவதில் ஒப்பிலா வள்ளல் களாக ஒங்கியவர்.

சித்தத்தின் சீரிய செம்மையால் சித்தர் எனப்பட்டவர்கள். அவர்கள் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் என்பார் வள்ளுவர். அத்தகைய மன மாசில்லாத அறவோரே சித்தர்களாக விளங்கினர். இதனையே மணிவாசகர் “சித்தமல் அறுவித்துச் சிவமாக்கி” என்கிறார். மலம் எனப்படும் மாசு நீங்கிய மணி களாக விளங்கியவர்களே இறைமை நிலையை எய்திய சித்தர்கள்

எனப்பட்டனர்

திருமூலர் வரலாறு சித்தர் தன்மையைச் சிறந்த படமாக்கிக் காட்டுவதாகும்.

மூலன் என்னும் ஆயன் தன் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருக்கும்போதே அவற்றின் முன்னேயே சாய்ந்து இறந்து விடுகிறான். தங்களுக்கு உணவும் நீரும் காவலும் வழங்கிய அவ்வாயன் இறப்பைத் தாங்கிக் கொள்ளமாட்டாத அம்மாடுகள், கலங்கிக் கண்ணீர் வடித்தன. அவனைச் சுற்றிச் சூழ்ந்து நின்றனவே அல்லாமல், மேய்தலையும் விட்டொழிந்தன.