பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

183

தன்னலங்கள் ஆகிய எல்லாமும் நீங்கி, இனிமையும் பொதுமையும் ஓங்கி நலம் செய்யும்.

ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலத்தை நன்றாகப் பேணிக் காள்ள வேண்டும் என்று திருமூலர் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்: அதுமட்டுமா? அடைய வேண்டிய உயர்ந்த மெய்ப்பொருள் மாண்பையும் அடைய மாட்டார். ஆதலால் உடலை நன்றாகப் பேணிக் கொள்ளத் தக்க வழிகளை யெல்லாம் கண்டு, அவ்வழிகளிலேயே பேணிவருகின்றேன் என்கிறார். மேலும், உடல் இழிவானது என்று ஒருகாலத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். உடல் நிலையற்றது என்றும், மலம் நீர் கோழை சளி முதலியவற்றுக்கு ழ

L மாக இருப்பது என்றும் இருபதிலே எழுச்சி, முப்பதிலே முறுக்கு என்றிருக்கும் உடல், நாற்பதிலே நழுவலாய், ஐம்பதிலே அசதியாய், அறுபதிலே ஆட்டமாய் எழுபதிலே ஏக்கமாய், எண்பதிலே தூக்கமாய் நிலைமாறுகிறது என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த உடம்பினுள்ளே காணுதற்கு அரிய கடவுட்பொருள் கோயில் கொண்டிருக்கும் அருமைப் பாட்டை உணர்ந்து கொண்டேன். அதன் பின்னே இவ்வுடல் கிடைத்த பேறும் பெருமையும் அருமையும் அரிது எனக் கொண்டு நன்றாகப் பேணிவருகிறேன் என்கிறார்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே"

என்பது அது:

66

66

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’

وو

என்று முழங்கியவர் திருமூலர். “யாதும் ஊரே யாவரும் கேளிர்.” யாதானும் நாடாமல் ஊராமால்" என்னும் கணியன் பூங்குன்றனார் திருவள்ளுவர் ஆகிய சான்றோர்களின் உலகளாவிய பார்வைபோல விரிந்தது திருமூலர் பார்வை.

நாட்டாலோ இனத்தாலோ மொழியாலோ நிறத்தாலோ பழக்க வழக்கங்கள் நடையுடைகள் ஆகியவற்றாலோ நமக்குள் வேறுபாடுகள் இருக்கக் கூடும். அவையெல்லாம், நம்மைப்