பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

18 இளங்குமரனார் தமிழ்வளம்

விட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே” என்னும் தாயுமானவர் வாக்காகும்.

பிறர்க்கென வாழும் புகழாளர்கள், பெருநலத் தொண்டர்கள் அருங்கொடையாளர்கள் அழியா வாழ்வினர் என்றும், சாவா உடம்பினர் என்றும் சாற்றப்படுவர் அவ்வகையில் சித்தராக வாழ்ந்த பெருமக்கள் தங்கள் உயிரிரக்கச் சான்றாகக் கண்டதும், உயிர் கலந்து ஒன்றி உரிமையால் எப்பயனும் எதிர்நோக்காமல் செய்த சித்த மருத்துவப்பணியும் அவர்களை அழியா வாழ்வினர் ஆக்கியுள்ளது. அவ்வரிசையில் மூலர் என்னும் பெயரோடு மூலராக விளங்கிய திருமூலர் பங்கு பெரிதாகும்.

னிய வாழ்க்கையா, நல்லறச் செயலா, மருத்துவத் திறமா, மூச்சுப் பயிற்சியா, இறைமை ஆய்வா எல்லாம் எல்லாம் உலகம் உய்வதற்காகத் திருமந்திரம் மூவாயிரம் படைத்ததுடன் 'முந்நூறு முப்பது' என்னும் நூல்களும் அருளிய அத்தெய்வ வாழ்வினர் வாழ்வார் நெஞ்சகத்தெல்லாம் நீடு வாழும் பெருவாழ்வினராம்.