பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைக்கிளை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

“காமம் சாலா இளமை யோள்வயின்

ஏமம் சாலா இடும்பை எய்தி

நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்

தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்

புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே”

என்பது முன்னதன் இலக்கணம் (996).

101

"பருவம் அடையாத ஒருத்தி; அவள் பருவம் அடைந்தவளா அடையாதவளா என்பதை அறிந்து கொள்ளாத இளையவன் ஒருவன்; ஆனால், அவளால் தாங்காத் துயர் தான் கொள்வதாகக் கூறுகிறான். தன்னைப் புரிந்து கொண்டு நடத்தலால் தனக்கும் அவளுக்கும் ஏற்படும் இன்பத்தையும் இல்லாக்கால் இருவர்க்கும் ஏற்படும் துன்பத்தையும் தானே பெருமிதமாகக் கூறுகிறான்; அவளிடமிருந்து மறுமொழி என எதுவும் அவன் பெற்றான் அல்லன்; எனினும், தானே சொல்லி அதனால் இன்பப் பட்டுக் கொள்கிறான்; இதுவே கைக்கிளை எனப்படுவது” என்பது இதன்பொருள்.

இந் நிலை, பால் பிரிவு இல்லாமல் பயிலும் இளம் பள்ளிகளிலும், இளையோர் பணிபுரியும் தொழிலகங்களிலும், நெருங்கி உறையும் குடியிருப்புகளிலும் பெருக நிகழ்தலும் சொல்லுறவாகத் தொடங்கி நல்லுறவாகப் பின்னே திகழ்தலும் காண்பார் கைக்கிளையாவது காதல் தொடக்கம் எனவே உளவியற்படி கொள்வர். உரிய வழிகாட்ட லால் உயரிய வாழ்வுக்கு அடித்தளம் ஆக்குவர்.

பெருந்திணை

இனிப் பெருந்திணை

பெருந்திணையை,

என்பதை எண்ணுவோம். ஆசிரியர்

"ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்

மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்

செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே”

என்கிறார்.

மடலேறுதல், இளமை நீங்கியபின் விரும்புதல், தெளிவற்ற காமமிகை, மிக்க காமத்தால் செய்யும் துணிவுச் செயல் ஆகிய நான்கும் பெருந்திணை எனப்படுபவை என்பது இதன் பொருளாம்.