பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

இத் திணையை அகத்தொடு முரணா வகையில் ஆய்ந்த அறிஞர் வ. சுப.மாணிக்கனார்,

66

'ஐந்திணையாவது அளவுக் காதல்; பெருந் திணையாவது மிகுதிக்காதல். பெரும் என்ற அடை அளவினும் மிகுதிப்பாட்டை மிகையைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று, பெருமழை, பெருமிதம், பெரும்பேச்சு, பெருங்காஞ்சி,பெருவஞ்சி என்ற தொடர்களை உடன் நோக்குக" என்பது இவண் கொள்ளத் தக்கது.

66

ம்

"களவை நாணின்றி வெளிப்படுத்திக் கற்பு ஆக்கினமையின் (ஏறியமடல் திறம்) ஐந்திணைப்படாது பெருந்திணைப்பட்டது” என்றும், இல்வாழ்க்கையில் காதல் நுகர்ச்சிக்கு ஒத்த மதிப்புக் கொடாது, இளமையை வேண்டுமளவு நுகராது, பொருள் முதலாயவற்றில் நாட்டம் கொண்டு ஒழுகுவது மிகையாதலின் இளமைதீர்திறம் பெருந்திணை யாயிற்று' என்றும், “கற்பு போய்வரும் பொருளில்லை. நாணோ ஒழுக் கத்தை விடாது அரிதில் போய்வரும் தன்மையது. நாண்விட்டமையால், காமத்து மிகுதிறத்தால் பெருந்திணையாயிற்று” என்றும், “களவுத் தலைவி மன்னரின் விழாவிற்கும் மகளிரின் துணங்கைக்கும் இல்லங் கடந்து புறப்பட்டே போய் விட்டாள். எண்ணம் சொல் அளவில் அமையாது இயங்கிய இச் செய்கை மிக்க காமத்து மிடல்” எனப்படும் என்றும் இவற்றின் முடிபையும் கூறுவார் மாணிக்கர். (தமிழ்க் காதல் - 234 - 257).

அகத்திணையை அடுத்து ஆசிரியர் புறத்திணை இயல் கூறினார். “முற்படக் கிளந்த எழுதிணை" (947) என்றவர், அவ்வெழுதிணைகளுக்கும் அமைந்த புறத்திணைகள் ஏழனையும் கூறுதலை நூன் முறையாகக் கொண்டார்.

நாம் எடுத்துக் கூறிய அகத்திணை தொடர்பான களவு, கற்பு எனக் கைகோள் இரண்டனையும், அவற்றின் தொடர்பான எஞ்சுதல் பொருள் கூறிய ‘பொருளியலையும் கண்டு, புறத்திணை இயலைக் காணலாம். பொருள் தொடர்ச்சி நோக்கியது இவ்வமைப்பாகும்.

களவு

ஒருவர்க்கு உரிமையாம் பொருளை ஒருவர் கவர்ந்து கொள்ளுதல், உலகியலில் சொல்லப்படும் களவாகும். அக் களவைக் கடிந்து ‘கள்ளாமை’ (களவு செய்யக் கருதாமை) கூறும் வள்ளுவர்,

“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்

என்பார். “உள்ளத்தால் உள்ளலும் (நினைத்தலும்) செய்தலோடு ஒக்கு” மென, உளமொன்றிய உரைவகுத்து ஆசிரியர் உளப் பாங்கை வெளிப்படுத்து