பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மடம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

மடம் என்பது இளமையொடு கூடிய உயரிய ஓர் இயற்கை. கற்றவை கேட்டவை என்பவற்றுள் தக்கவற்றை விடாப்பிடியாகக் கொள்ளும் கொள்கை வீறு ஆகும் அது. துறவர் நிலைப் பயிற்றிடம் 'மடம்' எனப் பெயர் கொள்ளப்பட்டது இக் கொள்கைக் கடைப்பிடி கருதியேயாம். அங்கே இப் பண்பியல் அருகியமையே, இப் பொருளை மறுக்கவும், சமையல் கூட ம் - சாப்பாடு' என்பவை தழுவிய ‘மடைப்பள்ளி’ நிலை யத்து வாழ்வினர் என்னும் பொருளுக்கு அவர்களை இடமாக்கியதாம். எம்துயர் தாங்குவதுடன் பிறர் துயரும் யாம் தாங்குவேம் என்னும் கொள்கைத் தவவீறு காவி ஆகும். காவுதல் - தாங்குதல். காவு தடி காவடி. 'காவினேம் கலமே" புறம். இக்காவி உடையளவில் நிற்கும் இடமும் உண்டுதானே! அதுபோல்.

66

கூற்று

தலைவனை மறைத்து நின்று காணுதல் முதலாகத் தலைவி கூற்று நிகழும் இடங்களையும் புதுவதோர் மணம், புதுவதோர் பொலிவு முதலாயவை கண்டு தோழி கூற்று நிகழுமிடங்களையும், களவு ஊரவர் அறிய வெளிப்படு நிலை முதலாகச் செவிலி கூற்று நிகழுமிடங்களையும் நாடக உத்தியில் நயமுற உரைக்கிறார் தொல்காப்பியர் (1057,1060,1061).

இடையிடையே களவொழுக்கம் குறித்த நுணுக்கச் செய்திகள்

சிலவற்றையும் குறிப்பிடுகிறார்.

தலைவி கூற்று

தலைவி தானாகக் கூறும் இடங்களும் உண்டு என்பதைக் கூறு கின்றார். ஆதலால், வினாவிய வழியே தலைவி பிற இடங்களில் கூறுவாள் என்பதைப் புலப்படுத்துகிறார்.

திருமணம் செய்யும் காலத்தைத் தள்ளிவைத்துத் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரியும் போதும், திருமணம் செய்யாமல் தேடிவந்து நீங்கும் தலைவனைக் கண்டபோதும், அயலார் மணம் வேண்டி நிற்றலைத் தலைவனுக்கு உரையெனத் தோழிக்கு உரைக்கும் போதும் தலைவி தானே கூறுதல் உண்டு (1058).

“உயிரைப் பார்க்கிலும் உயர்ந்தது நாணம்; அந் நாணத்தினும் குற்றமற்ற அறிவான் அமைந்த கற்பு உயர்ந்தது”; என்று முன்னோர் சொல்லிய சொல்லை ஏற்றுக் கொண்ட மனத்துடன், தலைவன் இருக்குமிடம் தேடிச் செல்லுதலும், தன்துயர் வெளிப்படுத்தாத நல்ல சொற்களைச் சொல்லுதலும் ஆகிய நிலையிலும் தலைவி கூற்று நிகழ்தல் உண்டு (1059).