பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

வாகைத் திணையில் வரும் ஒரு நூற்பா பெரிதும் எண்ணத்தக்கதாக

அமைந்துளது. அது,

"அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்,

ஐவகை மரபின் அரசர் பக்கமும்,

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்,

மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்,

பாலறி மரபின் பொருநர் கண்ணும்,

அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்"

OTTLIÐI (1012).

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்பதற்கு ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். அவையாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன” என்றார் இளம்பூரணர்.

வேட்டல் வேட்பித்தல் என்னும் இரண்டையன்றி அவரால் சான்று காட்டப் ‘பார்ப்பனப் பக்கம்' இடம் தரவில்லை. ஓதலாவது ‘கல்வி’ என்று கூறி, கல்வி விழுப்பம், கற்றோர் விழுப்பம், கற்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவெல்லாம் மாந்தப் பொதுநிலை அறம் கூறும் பாடல்களையே காட்டினார். எண்பொருளவாகச் செலச்சொல்லல், நுண்பொருள் காண்டல் (குறள். 424) இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் (குறள். 222) இவை பார்ப்பனப் பக்கம் என்னின், என்னதான் நாம் சொல்வது? இரவலர் புரவலை நீயும் அல்லை' என்ற புறப்பாட்டைப் ‘பார்ப்பன பக்கம்’ என்ன இளம்பூரணர்க்கு எப்படித் துணிவு வந்ததோ?

ஆனால்,நச்சினார்க்கினியரையோ சொல்ல வேண்டா!

பார்ப்பனர் என்றதும், பருந்தெனப் பாய்ந்து எடுத்துக்கொண்டு எழுதுவதற்கே பிறந்தவர், என விரிவாக எழுதினார்:

66

'ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறும்.

ஆறு பார்ப்பியல் என்னாது வகையென்றதனால் அவை தலை டை கடை கடையென ஒன்று மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம்.

இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப் படுதலின் இலக்கியமுமாயின.